< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
கடைக்குள் சாரை பாம்பு புகுந்ததால் பரபரப்பு: தீயணைப்பு துறையினர் பிடித்து காட்டில் விட்டனர்
|4 Jun 2022 3:19 PM IST
திருவள்ளூரில் கடைக்குள் புகுந்த சாரை பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து காட்டில் விட்டனர்.
திருவள்ளூரில் உள்ள கோலக்கொண்ட அம்மன் கோவில் அருகே உள்ள கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 45). இவர் அதே பகுதியில் சோடா கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று அவர் கடையில் இருந்த போது, திடீரென கடைக்குள் சுமார் 4 அடி நீளமுள்ள சாரை பாம்பு ஒன்று உள்ளே புகுந்தது. இதைக் கண்ட அவர் அலறி அடித்தபடி கடையிலிருந்து வெளியே ஓடினார். இது குறித்து அவர் திருவள்ளூரில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்கும் தகவல் தெரிவித்தார். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கடைக்குள் புகுந்த சாரைப் பாம்பை லாவகமாக பிடித்து பூண்டி காப்புக் காட்டில் பாதுகாப்பாக விட்டனர்.