< Back
மாநில செய்திகள்
குப்பை தொட்டியில் மனித எலும்பு கூடு கிடந்ததால் பரபரப்பு - போலீசார் கைப்பற்றி விசாரணை
சென்னை
மாநில செய்திகள்

குப்பை தொட்டியில் மனித எலும்பு கூடு கிடந்ததால் பரபரப்பு - போலீசார் கைப்பற்றி விசாரணை

தினத்தந்தி
|
29 May 2022 12:21 PM IST

குப்பை தொட்டியில் மனித எலும்பு கூடு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

சென்னை சூளை காளத்தி அப்பா பிரதான சாலையில் உள்ள குப்பை தொட்டியில் நேற்று முன்தினம் இரவு துப்புரவு பணியாளர்கள் குப்பையை அள்ளிக்கொண்டிருந்தனர். அப்போது பிளாஸ்டிக் பை ஒன்றுக்குள் மனித எலும்பு கூடு காணப்பட்டது. அவற்றை பார்த்த துப்புரவு பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வேப்பேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். வேப்பேரி போலீசார் விரைந்து சென்று எலும்பு கூடு பாகங்களை கைப்பற்றி எடுத்து சென்றனர். தலை உள்பட எலும்பு கூடு பாகங்களில் வார்னிஷ் பெயிண்டு அடிக்கப்பட்டு இருந்தது. மருத்துவ மாணவர்கள் தங்களது படிப்புக்காக பயன்படுத்தி விட்டு, அவற்றை குறிப்பிட்ட குப்பை தொட்டியில் வீசி சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்