< Back
மாநில செய்திகள்
கோட்டாட்சியர் அலுவலகத்தில் திரண்ட பொதுமக்களால் பரபரப்பு
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

கோட்டாட்சியர் அலுவலகத்தில் திரண்ட பொதுமக்களால் பரபரப்பு

தினத்தந்தி
|
3 Jun 2022 12:33 AM IST

கோட்டாட்சியர் அலுவலகத்தில் திரண்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

அன்னவாசல்:

அன்னவாசல் அருகே புதூர் ஊராட்சியில் புதூர், குளவாய்பட்டி, காட்டுப்பட்டி உள்ளிட்ட 3 கிராமங்களில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த 3 கிராமத்திற்கும் பொதுவாக வெற்றிக்கொண்ட அய்யனார், அடைக்கலம் காத்தார், பிடாரியம்மன் உள்ளிட்ட முக்கிய வழிபாட்டு கோவில்கள் உள்ளது. இந்த கோவில்களில் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஒருதரப்பை சேர்ந்த பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று திருவிழா நடத்துவது சம்பந்தமான கோரிக்கையை வலியுறுத்தி இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, தாசில்தார் முத்துக்கருப்பன், துணை போலீஸ் சூப்பிரண்டு அருள்மொழி அரசு உள்ளிட்ட அதிகாரிகள் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் செய்திகள்