< Back
மாநில செய்திகள்
ஏரிக்கரையில் கேட்பாரற்று கிடந்த நாட்டு துப்பாக்கியால் பரபரப்பு...!
மாநில செய்திகள்

ஏரிக்கரையில் கேட்பாரற்று கிடந்த நாட்டு துப்பாக்கியால் பரபரப்பு...!

தினத்தந்தி
|
29 Jun 2022 5:53 PM IST

நல்லம்பள்ளி அருகே ஏரிக்கரையில் கேட்பாரற்று கிடந்த நாட்டு துப்பாக்கியால் பரபரப்பு ஏற்பட்டது.

நல்லம்பள்ளி,

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே கோவிலூர் ஏரியில் கேட்பாரற்று நாட்டு துப்பாக்கி ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு இன்று தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கோவிலூர் ஏரிக்கரை பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது முட்செடிகள் நிறைந்த பகுதியில் கேட்பாரற்றுக் கிடந்த நாட்டு துப்பாக்கியை போலீசார் கைப்பற்றினர்.

மேலும் வேட்டைக்காக நாட்டு தூப்பாக்கி பயன்படுத்தப்பட்டதா என்ற கோணத்தில் அக்கிராமத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏரிக்கரையில் நாட்டு துப்பாக்கி கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்