< Back
மாநில செய்திகள்
ஏர்வாடி கடற்கரையில் இரும்பு பேரல் கரை ஒதுங்கியதால் பரபரப்பு
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

ஏர்வாடி கடற்கரையில் இரும்பு பேரல் கரை ஒதுங்கியதால் பரபரப்பு

தினத்தந்தி
|
27 May 2022 12:06 AM IST

ஏர்வாடி கடற்கரையில் இரும்பு பேரல் கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கீழக்கரை,

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடி அடஞ்சேரி கடற்கரையில் திடீரென்று இரும்பு பேரல் ஒன்று கரை ஒதுங்கியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதி மீனவர்கள் கீழக்கரை கடலோர போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து போலீசார் பேரலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இது குறித்து அப்பகுதி மீனவர்கள் கூறுகையில் இந்த இரும்பு பேரல் மீன்பிடி படகில் தற்காப்பு மிதவைக்காக பயன்படுத்தக் கூடியவை. தவறுதலாக படகிலிருந்து கீழே விழுந்து மிதந்து வந்ததாக இருக்கக்கூடும் என்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்