< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
|25 May 2022 1:43 AM IST
விக்கிரமசிங்கபுரத்தில் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் பசுக்கிடைவிளை அம்மன் கோவில் கீழத்தெருவை சேர்ந்தவர் காசி மகன் ஆனந்த் (வயது 45). இவர் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார். இதற்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புதிதாக எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை வாங்கி உள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் இவர் தனது மோட்டார் சைக்கிளில் தண்ணீர் கேன்களை ஏற்றிக் கொண்டிருக்கும்போது திடீரென மோட்டார் சைக்கிள் தீப்பிடித்தது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதுமாக எரிந்து நாசமானது. இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.