< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
3 பள்ளி மாணவர்கள் சாணி பவுடர் குடித்ததால் பரபரப்பு
|12 Oct 2023 1:00 AM IST
காரிமங்கலம் அருகே 3 பள்ளி மாணவர்கள் சாணி பவுடர் குடித்ததால் பரபரப்பு
காரிமங்கலம்:
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே சென்னம்பட்டி கிராமத்தை 3 மாணவர்கள் அனுமந்தபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9- ம் வகுப்பு படித்து வருகிறார்கள். 14 வயது கொண்ட இந்த 3 மாணவர்களும் நேற்று தங்கள் வீட்டின் அருகே சாணி பவுடரை கலக்கி குடித்து உள்ளனர். அதன்பின்னர் பள்ளிக்கு சென்ற இவர்கள் மற்ற மாணவர்களிடம் இது பற்றி கூறியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் 3 மாணவர்களையும் மீட்டு அனுமந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உரிய சிகிச்சை அளித்தனர். சாணி பவுடர்குடித்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.