< Back
மாநில செய்திகள்
புழல் ஏரியில் உபரிநீர் திறப்பு 100 கனஅடியில் இருந்து 500 கனஅடியாக அதிகரிப்பு..!
மாநில செய்திகள்

புழல் ஏரியில் உபரிநீர் திறப்பு 100 கனஅடியில் இருந்து 500 கனஅடியாக அதிகரிப்பு..!

தினத்தந்தி
|
11 Nov 2022 12:02 PM IST

புழல் ஏரியில் உபரிநீர் திறப்பு அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில், வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.

சென்னையை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்த வீட்டு விட்டு மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது உள்ளதால் சென்னையில் நள்ளிரவு முதல் தொடர்ந்து கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

இதனால் சென்னையின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள பல்வேறு ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகிறது. அந்த வகையில் கனமழையால் புழல் ஏரிக்கு நீர்வரத்து 1000 கனஅடியாக அதிகரித்து உள்ளது.

இதனால் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு100 கனஅடியில் இருந்து 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. உபரிநீர் திறப்பு அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்