< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
"மோடியை தவிர எந்த பிரதமரும் தமிழின் தொன்மை குறித்து பேசியதில்லை" - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
|12 Aug 2023 6:47 PM IST
மோடியை தவிற எந்த பிரதமரும் தமிழின் தொன்மை குறித்து பேசியதில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
மதுரை,
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது;
எந்த பிரதமரும் தமிழின் தொன்மை குறித்து பேசியதில்லை. ஐ.நா. சபையிலோ, உலக அரங்கிலோ எந்த பிரதமரும் பேசியிருப்பார்களா.. மோடி மட்டும் தான் பேசியுள்ளார்.
மோடிதான் தமிழ் கலாச்சாரத்தையும், தமிழ் மொழியின் சிறப்பையும் சொல்லியிருக்கிறார். பாரதியாரின் கவிதை நடையை சொல்லியிருக்கிறார். அவரின் சுதந்திர தியாகத்தை சொல்லியிருக்கிறார். மோடி பேசுவதை சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தோழமை என்ற உணர்வுடன் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.