< Back
மாநில செய்திகள்
அழகன்குளத்தில் அகழாய்வு பணிகள் மீண்டும் டிசம்பர் மாதம் ெதாடங்கப்படும்-தொல்லியல் நிபுணர்கள் தகவல்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

அழகன்குளத்தில் அகழாய்வு பணிகள் மீண்டும் டிசம்பர் மாதம் ெதாடங்கப்படும்-தொல்லியல் நிபுணர்கள் தகவல்

தினத்தந்தி
|
9 Sept 2023 12:12 AM IST

அழகன்குளத்தில் அகழாய்வு பணிகள் மீண்டும் டிசம்பர் மாதம் தொடங்கப்படும் என்று தொல்லியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.

பனைக்குளம்.

அழகன்குளத்தில் அகழாய்வு பணிகள் மீண்டும் டிசம்பர் மாதம் தொடங்கப்படும் என்று தொல்லியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.

13 ஆயிரம் பழங்கால பொருட்கள்

மண்டபம் ஊராட்சி ஒன்றியம் அழகன்குளத்தில் கடல் அகழ்வாய்வு நடத்துவது சம்பந்தமாக முதற்கட்ட பணிகள் மற்றும் அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதற்காக நேற்று காலை அழகன்குளம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தொல்லியல் கடல் அகழாய்வு நிபுணர்கள் தொல்லியல் துறை ராமசாமி, சிவக்கொழுந்து மற்றும் திருஹரி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக தொல்லியல் துறை நிபுணர்களை அழகன்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் அசோகன் வரவேற்றார்.

அப்போது அழகன்குளத்தின் பெருமைகள் குறித்தும் இந்த கிராமத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் சேகரிப்பு குறித்தும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ஏற்கனவே அகழாய்வு நடந்த முக்கிய இடமான அழகன்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியை பார்வையிட்டனர்.

டிசம்பர் மாதம்...

இந்த ஆய்வுக்காக அழகன்குளம் கிராமத்தில் தொல்லியல் துறையினர் மூலம் 52 இடங்களில் 15 அடி முதல் 20 அடி வரை ஆழம் தோண்டப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன என பல்வேறு தகவல்களை அவர் தொல்லியல் நிபுணர்களிடம் கூறினார். இந்த தகவல்களை கேட்டுக்கொண்ட தொல்லியல் நிபுணர்கள் தொடர்ந்து டிசம்பர் மாதத்தில் ஆய்வுகள் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அழகன்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியின் வைர விழா நடைபெற்றது. அந்த விழாவின் வைர விழா மலர் புத்தகத்தில் தொல்லியல் துறையினர் மேற்கொண்ட தகவல்கள் முழுவதும் அந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருந்தன.

அகழ்வாய்வு குறித்த முழு விவரங்களையும் படத்துடன் விரிவாக அச்சிடப்பட்டு இருப்பதைக் கண்ட இத்துறையினர் பள்ளியின் வைர விழா குழுவினருக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்