< Back
மாநில செய்திகள்
வள்ளியூர் அருகே அகழாய்வில் தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட ஓடு கண்டெடுப்பு
திருநெல்வேலி
மாநில செய்திகள்

வள்ளியூர் அருகே அகழாய்வில் தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட ஓடு கண்டெடுப்பு

தினத்தந்தி
|
28 Jun 2023 2:31 AM IST

வள்ளியூர் அருகே துலுக்கர்பட்டியில் நடந்து வரும் 2-வது கட்ட அகழாய்வு பணியில், தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட ஓடு கண்டெடுக்கப்பட்டது.

வள்ளியூர்:

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள துலுக்கர்பட்டி விளாங்காடு பகுதியில் தமிழக அரசு சார்பில் அகழாய்வு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக நடந்த பணியின்போது ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த நிலையில் கடந்த மாதம் 6-ந் தேதி 2-வது கட்ட அகழாய்வு பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இந்த அகழாய்வு பணியின்போது தமிழ் எழுத்துகளில் புலி என்று பொறிக்கப்பட்ட கருப்பு சிவப்பு பானை ஓடு கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரையிலும் அகழாய்வு பணியில் கண்டெடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் தனித்தனியாக சேகரிக்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் சென்னையில் உள்ள தொல்லியல் துறையின் ஆய்வுக்கு அனுப்பப்பட உள்ளது. மேலும் இரும்பு கால புதைவிட பகுதியில் வாழ்விடப் பகுதியாக கருதப்படுவதால் இன்னும் பல அரிய வகை தொல்லியல் பொருட்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக துலுக்கர்பட்டி அகழாய்வு பணி கள இயக்குனர் வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்