< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
தேர்வாய் கண்டிகை சிப்காட்டில் நாளை மின்தடை
|5 Aug 2022 1:51 PM IST
தேர்வாய் கண்டிகை துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிக்காரணமாக நாளை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின்தடை ஏற்படும்.
கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வாய் கண்டிகையில் உள்ள துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை தேர்வாய் கண்டிகை சிப்காட், தேர்வாய் கிராமம், கோபால்ரெட்டி கண்டிகை, குருவராஜகண்டிகை, பனஞ்சாலை, அமரம்பேடு, சிறுவாடா, கரடிபுத்தூர், கண்ணன்கோட்டை என்.எம்.கண்டிகை, பூவலம்பேடு, சின்னபுலியூர், தாணிப்பூண்டி, பூதூர் மற்றும் அதனைச்சுற்றி உள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை தேர்வாய் கண்டிகை துணை மின்நிலைய இளநிலை பொறியாளர் லாவண்யா தெரிவித்துள்ளார்.