< Back
மாநில செய்திகள்
நான் முதல்வன் திட்டத்தில் ஊக்கத்தொகை பெறுவதற்கான மதிப்பீடு தேர்வு - மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
மாநில செய்திகள்

'நான் முதல்வன்' திட்டத்தில் ஊக்கத்தொகை பெறுவதற்கான மதிப்பீடு தேர்வு - மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

தினத்தந்தி
|
1 Aug 2023 7:23 PM IST

ஊக்கத்தொகை பெறுவதற்கான மதிப்பீடு தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

'நான் முதல்வன்' திட்டத்தின் போட்டித் தேர்வு பிரிவில், யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ரூ.7,500 ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊக்கத்தொகையை பெறுவதற்கான மதிப்பீடு தேர்வு வரும் செப்டம்பர் 10-ந்தேதி நடைபெற உள்ளது.

மதிப்பீடு தேர்வு அடிப்படையில் 1,000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, மாதம் ரூ.7,500 வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் 'நான் முதல்வன்' திட்டத்தில் ஊக்கத்தொகை பெறுவதற்கான மதிப்பீடு தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும், இது தொடர்பான விவரங்களை www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்