நாமக்கல்
நாமக்கல், கொல்லிமலையில் குரூப்-4 மாதிரி தேர்வை 527 பேர் எழுதினர்
|நாமக்கல் மற்றும் கொல்லிமலை மையங்களில் நேற்று நடந்த குரூப்-4 மாதிரி தேர்வில் 527 பேர் கலந்து கொண்டனர்.
நாமக்கல் மற்றும் கொல்லிமலை மையங்களில் நேற்று நடந்த குரூப்-4 மாதிரி தேர்வில் 527 பேர் கலந்து கொண்டனர்.
மாதிரி தேர்வு
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பில் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வருகிற 24-ந் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 7,301 காலி பணியிடங்கள் கொண்ட குரூப்-4 தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு முன்மாதிரி தேர்வாக நாமக்கல் மாவட்ட அளவில் 10 மற்றும் 17-ந் தேதிகளில் நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கொல்லிமலை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாதிரி தேர்வு நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
527 பேர் பங்கேற்பு
அதன்படி நேற்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்ற தேர்வை நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 501 பேரும், கொல்லிமலையில் 26 பேரும் என மொத்தம் 527 பேர் எழுதினர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வின் அசல் வினாத்தாட்கள் போலவே 100 பொதுத்தமிழ் வினாக்கள் மற்றும் 100 பொது அறிவியல் வினாக்களை உள்ளடக்கியதாக கேள்விகள் கேட்கப்பட்டன.
இந்த முன்மாதிரி தேர்வில் மாணவர்கள் பங்கேற்பதன் மூலம் தேர்வு அறையில் ஏற்படும் சந்தேகங்களான ஓ.எம்.ஆர்.ஷீட் நிரப்புதல், ஓ.எம்.ஆர். ஷீட் சேடு செய்தல், வினாட்களை எதிர்கொள்ளும் முறை, தேர்வு பற்றிய ஐயங்கள் குறித்து தெளிவுப்படுத்தி கொள்வதால், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-4 தேர்வை எவ்வித பதற்றமும் இன்றி எழுத முடியும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா கூறினார்.கடந்த 10-ந் தேதி நடந்த முதல் மாதிரி தேர்வில் 463 பேர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.