< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரியில் 3 மையங்களில் நடந்தவட்டார கல்வி அலுவலர்கள் தேர்வை 1,052 பேர் எழுதினர்
|11 Sept 2023 12:30 AM IST
கிருஷ்ணகிரியில் நேற்று வட்டார கல்வி அலுவலர்களுக்கான தேர்வு கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என 3 மையங்களில் நடந்தது. இந்த தேர்வை எழுத மொத்தம் 1,226 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தனர். தேர்வை 1,052 பேர் எழுதினர். 174 பேர் தேர்வு எழுத வரவில்லை.
இந்த தேர்வை கலெக்டர் சரயு தலைமையில் வருவாய்த்துறையினர், தொடக்க கல்வி இணை இயக்குனர் (நிர்வாகம்) சுகன்யா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி மற்றும் பறக்கும் படையினர் மேற்பார்வையிட்டனர். இதையொட்டி 3 தேர்வு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வர்களை தவிர மற்ற யாரும் தேர்வு மையங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.