கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்குரூப் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்
|கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 மற்றும் குரூப்-2 தேர்விற்கான ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
இந்த பயிற்சி வகுப்புகள் வருகிற 14-ந் தேதி, காலை 10.30 மணி முதல் வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் இந்த இணைப்பின் https://rb.gy/6ei6u மூலம் தங்களை பதிவு செய்துக்கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த நபர்கள் இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.