< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சிதம்பரம் அருகே அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் மீது முன்னாள் மாணவர்கள் தாக்குதல்..!
|16 March 2023 5:56 PM IST
சிதம்பரம் அருகே அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் மீது முன்னாள் மாணவர்கள் தாக்குதல் நடத்தினர்.
சிதம்பரம்,
சிதம்பரம் அருகே அரசு கலைக் கல்லூரியில் எராளனமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கல்லூரியில் மகளிர் தினத்தன்று நடந்த கலை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்சிக்கு கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்களும் வந்துள்ளனர்.
நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது முன்னாள் மாணவர்கள், விசில் அடித்து ஆரவாரம் செய்துள்ளனர். இதனால் கோபமடைந்த கல்லூரி பேராசிரியர் மணியரசன் முன்னாள் மாணவர்கள் அனைவரையும் வெளியேற சொன்னதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த முன்னாள் மாணவர்கள் கல்லூரிக்கு வெளியே உள்ள கடைக்கு வந்த பேராசிரியர் மணியரசனை சுற்றி வளைத்து சராமாரியா தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் அந்த கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.