< Back
தமிழக செய்திகள்
முன்னாள் ராணுவவீரர் விபத்தில் பலி
ராணிப்பேட்டை
தமிழக செய்திகள்

முன்னாள் ராணுவவீரர் விபத்தில் பலி

தினத்தந்தி
|
9 Jun 2022 10:51 PM IST

நடைபயிற்சியில் ஈடுபட்ட முன்னாள் ராணுவவீரர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் பகுதியை சேர்ந்தவர் அன்வர்பாஷா (வயது 57). முன்னாள் ராணுவ வீரரான இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை அருகே சாலையை கடந்து சர்வீஸ் சாலைக்கு வந்தபோது, அந்த வழியாக வந்த ஒரு மோட்டார்சைக்கிள் திடீரென அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

அதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி அன்வர்பாஷா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்