< Back
மாநில செய்திகள்
முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தினத்தந்தி
|
26 April 2023 12:00 AM IST

முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கற்பகம் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் 4 பேருக்கு ரூ.1¼ லட்சத்துக்கான கல்வி நிதியுதவிக்கான காசோலைகளை கலெக்டர் வழங்கினார். அதனைத்தொடர்ந்து முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் இருந்து இலவச மின் இணைப்பு, கருணை அடிப்படையிலான வேலைவாய்ப்பு, துப்பாக்கி உரிமங்களை புதுப்பித்தல் போன்ற கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் மேற்கண்ட மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அனுப்பி மனுக்களுக்கு உடனடி தீர்வு காண்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இனி வரும் காலங்களில் கோரிக்கைகள் ஏதேனும் இருப்பின் அதனை நிறைவேற்றிட மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார். கூட்டத்தில் முன்னாள் படைவீரர் நல கண்காணிப்பாளர் கலையரசி காந்திமதி, நல அமைப்பாளர் சடையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்