அரியலூர்
முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்
|முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.
அரியலூர் மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள், அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் சார்ந்தோர்களிடம் இருந்து அவர்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்து, அவர்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 21 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும், 14 முன்னாள் ராணுவ வீரர்கள், அவர்களை சார்ந்தோர்களுக்கு ரூ.4.10 லட்சம் மதிப்பில் நிதியுதவிகள், கல்வி உதவித்தொகை மற்றும் திருமண நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினாா். அரியலூர் மாவட்டத்தில் உள்ள முன்னாள் ராணுவ வீரா்கள் மற்றும் சார்ந்தோர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார். இதில் முன்னாள் ராணுவ வீரர் நல உதவி இயக்குனர் (பொறுப்பு) மேஜர் சரவணன் (ஓய்வு), கண்காணிப்பாளர் மற்றும் நல அமைப்பாளர் கலந்து கொண்டனர்.