< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
முன்னாள் படை வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்; 25-ந் தேதி நடக்கிறது
|19 April 2023 12:23 AM IST
முன்னாள் படை வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம் 25-ந் தேதி நடக்கிறது.
பெரம்பலூர் மாவட்ட முன்னாள் படை வீரர், அவர்தம் குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம், வருகிற 25-ந் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்ட அரங்கத்தில் நடைபெறவுள்ளது. எனவே பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படை வீரர், அவர் தம் குடும்பத்தினர் மற்றும் படையில் பணிபுரிபவர்களை சேர்ந்தவர்கள் தங்களது கோரிக்கை, குறையை மனுவாக கூட்டத்தில் நேரில் சமர்ப்பிக்கலாம். மேலும் மனுக்கள் அளிக்க விரும்புவோர் மனுவின் இரு பிரதிகளை அடையாள அட்டை நகலுடன் அளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவல் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.