< Back
மாநில செய்திகள்
நாமக்கல்லில், நாளை முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம்
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல்லில், நாளை முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம்

தினத்தந்தி
|
26 Jun 2023 12:15 AM IST

நாமக்கல்லில், நாளை முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர்கள், முன்னாள் படைவீரர்களின் விதவையர்கள், படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், எனது தலைமையில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது.

எனவே நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள், அவரை சார்ந்தோர்கள் மற்றும் படைப்பணியில் பணிபுரியும் படைவீரர்களின் குடும்பத்தார்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை 2 பிரதிகளை நேரில் சமர்ப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்