< Back
மாநில செய்திகள்
முன்னாள் படை வீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
சிவகங்கை
மாநில செய்திகள்

முன்னாள் படை வீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தினத்தந்தி
|
24 Dec 2022 12:41 AM IST

சிவகங்கையில் 28-ந்தேதி முன்னாள் படை வீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.

சிவகங்கை மாவட்ட முன்னாள் படை வீரர்கள், படையில் பணியாற்றுவோர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூடத்தில் வருகிற 28-ந்தேதி (புதன்கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ளது. எனவே சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரா், படைவீரர் மற்றும் அவரை சார்ந்தோர், அன்று காலை 10.30 மணிக்கு கூட்டத்திற்கு வந்து, தங்களது குறைகளை மனுவாக வழங்கி தீர்வு பெறலாம். இந்த தகவலை கலெக்டர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்