திருவள்ளூர்
மறு வேலை வாய்ப்பு பெற முன்னாள் படை வீரர்கள் திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் - திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தகவல்
|மறு வேலை வாய்ப்பு பெற முன்னாள் படை வீரர்கள் திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படை வீரர்கள் மறு வேலை வாய்ப்பு பெற்றிட ஏதுவாக தங்களுக்கு தேவைப்படும் திறன் பயிற்சிகளை உடனடியாக ஜவஹர்லால் நேரு சாலை, திருவள்ளூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கீழ் தளத்தில் அமைந்துள்ள முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தின் தொலைபேசி எண்: 044-29595311 -ல் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், விவரங்களை முன்னாள் படை வீரர் கையொப்பமிட்ட விண்ணப்பத்தில் தெரிவித்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அல்லது exwelltlr@tn.gov.in என்ற இணையதள முகவரி மூலமாகவோ மூலமாகவும் அனுப்பி வைத்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பத்தில் இடம்பெற வேண்டிய விவரங்கள்: முன்னாள் படை வீரர் எண் தரம், பெயர், முகவரி, தொலைபேசி எண், பிறந்த தேதி, கல்வி தகுதி மற்றும் திறன் பயிற்சி பெற விரும்பும் தொழில் முறை ஆகியவை ஆகும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.