திருநெல்வேலி
முன்னாள் ராணுவ வீரர் கவுரவிப்பு
|சுதந்திர தின விழாவில் முன்னாள் ராணுவ வீரர் கவுரவிக்கப்பட்டார்.
நெல்லை:
நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் சுதந்திர தின விழா நடந்தது. இதில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு முன்னாள் ராணுவ வீரர் சிவனைந்த பெருமாளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். தொடர்ந்து மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தேசிய கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
மாவட்ட துணைத்தலைவர்கள் வெள்ளப்பாண்டியன், காளை ரசூல், கவிபாண்டியன், மாவட்ட ஓ.பி.சி. பிரிவு தலைவர் டியூக் துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பாளையங்கோட்டை, சமாதானபுரத்தில் உள்ள சக்சஸ் அகாடமி ஸ்டடி சென்டரில் நடந்த சுதந்திர தின விழாவில் மத்திய மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன் தேசிய கொடியேற்றினார். வர்த்தக அணி மாவட்ட தலைவர் சக்சஸ் புன்னகை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலப்பாளையத்தில் மனிதநேய ஆட்டோ தொழிற்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற விழாவுக்கு சங்க செயலாளர் மைதீன் தலைமை தாங்கினார். த.மு.மு.க. மாவட்ட தலைவர் ரசூல்மைதீன் தேசிய கொடி ஏற்றினார்.