விருதுநகர்
முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீச்சால் பரபரப்பு
|முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அருப்புக்கோட்டை,
முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னாள் பஞ்சாயத்து தலைவர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கொப்புசித்தம்பட்டி ஊராட்சியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 58). முன்னாள் பஞ்சாயத்து தலைவரான இவர் தற்போது பந்தல்குடியில் வசித்து வருகிறார்.
கொப்புசித்தம்பட்டியில் உள்ள இவருக்கு சொந்தமான வீட்டில் அவரது சகோதரி பஞ்சவர்ணம் வசித்து வந்தார். இந்த வீட்டில், அதே பகுதியை சேர்ந்த தாமரைசெல்வன் என்பவர் காலி மதுபாட்டில்களில் பெட்ரோலை நிரப்பி வந்து தீ வைத்து, வீட்டின் கதவு, ஜன்னல்களில் வீசிவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
தீப்பற்றி எரிந்தது
பெட்ரோல் குண்டுகள் வீசியதில் கதவு, ஜன்னல்களில் தீப்பற்றி எரிந்தது. உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதுகுறித்து ஜெய்சங்கர், பந்தல்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாமரைச்செல்வனை தேடி வருகின்றனர். முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.