சிறிய கடை.. ஆனால் பல கோடி...! முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை சிக்கிய ஆதாரப்பூர்வ தகவல்...!
|கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு திரண்ட தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்
சென்னை
தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்த பிறகு முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்கள் கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை மேற்கொணடனர்.முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திருச்சி உள்ளிட்ட 43 இடங்களில் கடந்த ஆண்டு சோதனை நடத்தப்பட்டது.
லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் தகவல் அறிக்கையில், 2016 ஏப்ரல் 1-ம் தேதி முதல் 2021 மார்ச் 31ஆம் தேதி வரை வருமானத்திற்கு அதிகமாக சி.விஜயபாஸ்கர் 51 கோடியே 35 லட்சம் மதிப்பிலான சொத்துகளை சேர்த்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவரது மனைவி ரம்யாவும் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடியே 22 லட்சம் மதிப்பிலான சொத்துகளை குவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். = மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கு தகுதியானது என்று தேசிய மருத்துவ குழுமத்தின் விதிமுறைகளுக்கு முரணாக மருத்துவமனைக்கு சான்றிதழ் வழங்கியுள்ளார். இது சம்பந்தமான ஆவணங்களை கைப்பற்ற சென்னையில் 5 இடங்களிலும், சேலத்தில் 3 இடங்களிலும், மதுரை, தேனி, புதுக்கோட்டை, திருவள்ளுர் மற்றும் தாம்பரம் ஆகிய நகரங்களில் தலா ஒரு இடத்திலும் என மொத்தம் 13 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் புதிய மருத்துவ கல்லூரி தொடங்க தகுதி உள்ளது என விதிகளுக்கு முரணாக சான்றிதழ் வழங்கியதாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை பேராசிரியர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கிராமப்புறங்களில் உள்ள தெருவிளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில்அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அது சம்பந்தமான ஆவணங்களை கைப்பற்ற சென்னையில் 10 இடங்களிலும், கோவையில் 9 இடங்களிலும், திருச்சி, செங்கல்ப்பட்டு, தாம்பரம் மற்றும் ஆவடி என மொத்தம் 26 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
ஒரே நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோரின் தொடர்புடைய 39 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
சோதனையை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு கூடியிருந்த
எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்கள் போலீசார் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவருடைய ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். அவரது ஆதரவாளர்களை குண்டு கட்டாக தூக்கிச் சென்று போலீசார் கைது செய்தனர்.