< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்து அவதூறு பரப்பியதாக வழக்கு - ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்க ஐகோர்ட்டு உத்தரவு
|10 Nov 2023 8:09 PM IST
அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் சமூகத்தில் பெரிய பொறுப்பில் இருந்தவர் என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர், தன்னிடம் ரூ.14 கோடி பணம் வாங்கிவிட்டு அதில் ரூ.3 கோடியை மட்டும் திருப்பி செலுத்தியதாகவும், மீதி பணத்தை தராமல் மிரட்டுவதாகவும் கேரளாவைச் சேர்ந்த ஷர்மிளா என்ற பெண் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் கருத்து பதிவிட்டு வந்தார்.
இந்த நிலையில் ஷர்மிளா மீது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை ஐகோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஷர்மிளா மான நஷ்ட ஈடாக ரூ.1 கோடி வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் சமூகத்தில் பெரிய பொறுப்பில் இருந்தவர் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.