< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உருவப்படம் எரிப்பு
|6 March 2023 12:14 AM IST
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உருவப்படம் எரிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் கடைவீதியில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் நேற்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து அவதூறாக பேசியதாக கூறி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உருவப்படத்துடன் கூடிய உருவ பொம்மையை கோஷமிட்டபடி எடுத்து வந்தனர். அப்போது உடையார்பாளையம் கடைவீதி பஸ் நிலையம் அருகே உருவ பொம்மையை காலணியால் அடித்து, காலால் உதைத்து, பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சித்தனர். அப்போது அங்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதில் போலீசார் உருவ பொம்மையை எடுத்து சென்றனர். பின்னர் ஜெயக்குமார் உருவப்படத்தை எரித்து கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.