< Back
மாநில செய்திகள்
பணத்தை வைத்து ஆள் பிடிக்கும் வேலையை செய்து கொண்டுள்ளனர் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
மாநில செய்திகள்

பணத்தை வைத்து ஆள் பிடிக்கும் வேலையை செய்து கொண்டுள்ளனர் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

தினத்தந்தி
|
28 Aug 2022 5:44 PM IST

அதிமுகவில் சசிகலா, தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடமில்லை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை,

சட்டமன்ற உறுப்பினர்கள் ஓ.பன்னீர்செல்வம் அணிக்குச் செல்வதால் அதிமுகவுக்கு பின்னடைவு இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுகவில் சசிகலா, தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடமில்லை என்று கூறினார்.

மேலும் இதுகுறித்து ஜெயக்குமார் கூறியதாவது:-

"சட்டமன்ற உறுப்பினர்கள் பன்னீர்செல்வம் அணிக்கு தாவுவதால், அதிமுகவுக்கு பின்னடைவு என்பது இல்லை. பணம் பாதாளம் வரை பாயும். தினகரன், சசிகலா மற்றும் பன்னீர்செல்வத்திடம் கோடிக்கணக்கான பணம் குவிந்திருக்கிறது. அந்த பணத்தைவைத்து இன்று ஆள்பிடிக்கும் வேலையைத்தான் செய்து கொண்டுள்ளனர்.

அதனுடைய முதல் கட்டமாக தற்போது ஐயப்பனை பிடித்துள்ளனர். எத்தனை பேரை பிடித்தாலும், அதிமுகவை ஒன்றும் அசைக்கவே முடியாது. அதே நேரத்தில் இதனால், அதிமுகவுக்கு எந்த ஒரு பின்னடைவும் கிடையாது.

அதிமுகவில் பன்னீர்செல்வம், சசிகலா, தினகரனுக்கு இடமில்லை. சுருக்கமாக பழமொழியாக சொல்ல வேண்டும் என்றால், கறந்த பால் மடி புகாது, கருவாடு மீனாகாது" என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்