< Back
மாநில செய்திகள்
திருமணமான பெண்ணை காதலிக்கும்படி மிரட்டிய முன்னாள் காதலன்...!
மாநில செய்திகள்

திருமணமான பெண்ணை காதலிக்கும்படி மிரட்டிய முன்னாள் காதலன்...!

தினத்தந்தி
|
22 April 2023 4:28 PM IST

திருமணமான அந்த பெண் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

கோவை,

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியை சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது 27). இவரும், ஒலம்பஸ் ராமசாமிநகரை சேர்ந்த 20 வயது பெண்ணும் காதலித்தனர். பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

இதையடுத்து அந்த பெண்ணிற்கு வேறு ஒரு நபருடன் திருமணம் நடைபெற்றது. குடும்ப பிரச்சினை காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு அந்த பெண், கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இதை அறிந்த சரவணக்குமார் மீண்டும் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு தன்னை காதலிக்கும்படி கூறி வற்புறுத்தியுள்ளார். இதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்தார்.

சம்பவத்தன்று கோவை கடைவீதியில் அந்த இளம்பெண் நடந்து சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்று தன்னை காதலிக்குமாறு கூறி சரவணக்குமார் வற்புறுத்தினார். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சரவணக்குமார் அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டினார். இதுகுறித்த புகாரின்பேரில் கடைவீதி போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணக்குமாரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்