< Back
மாநில செய்திகள்
பாலியல் தொழில் நடத்துவதில் மோதல்.. விடுதி மீது பெட்ரோல் குண்டு வீசிய முன்னாள் ஊழியர் கைது

கைது செய்யப்பட்ட வினோத்

சென்னை
மாநில செய்திகள்

பாலியல் தொழில் நடத்துவதில் மோதல்.. விடுதி மீது பெட்ரோல் குண்டு வீசிய முன்னாள் ஊழியர் கைது

தினத்தந்தி
|
29 Aug 2022 4:40 PM IST

விருகம்பாக்கம் அருகே தங்கும் விடுதி மீது பெட்ரோல் குண்டு வீசிய முன்னாள் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி:

விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமம் பகுதியில் அன்சாரி என்பவருக்கு சொந்தமான தங்கும் விடுதி உள்ளது. கடந்த 26-ந் தேதி இரவு பைக்கில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் விடுதியின் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசி விட்டு தப்பி சென்றனர். இதில் அங்குள்ள வரவேற்பு அறை மேஜை தீப்பிடித்து எரிந்தது அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதுகுறித்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விருகம்பாக்கம் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் மதுரவாயல் பகுதியை சேர்ந்த வினோத் (என்ற) வினோத்குமார் (37), என்பவரை விருகம்பாக்கம் தனிப்படை போலீசார் நேற்று இரவு கைது செய்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் வினோத் கடந்த 4 ஆண்டுகளாக அதே விடுதியில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அங்கு 25-க்கும் மேற்பட்ட அழகிகளை தங்க வைத்து "ஆப்" ஒன்றின் மூலம் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளனர்.

இதில் தமீம் அன்சாரி, வினோத்திற்க்கு ரூ.3 லட்சம் வரை பணம் கொடுக்க வேண்டி இருந்தது. இந்நிலையில் பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்த தமீம் வினோத்தை தமீம் அன்சாரி வேலையில் இருந்து நீக்கியுள்ளார்.

இதையடுத்து வினோத் தனியாக வாடிக்கையாளர்களை பிடித்து வேறு விடுதிக்கு அழைத்து சென்று தொடர்ந்து விபச்சார தொழில் செய்து வந்துள்ளார். இதனால் தமீம் அன்சாரி விடுதிக்கு வரும் வாடிக்கையாளர்கள் வெகுவாக குறைந்து விட்டனர்.

இந்த நிலையில் தமீம் அன்சாரி கடந்த சில நாட்களுக்கு முன்பு வினோத்தை அழைத்து தனியாக தொழில் செய்யக் கூடாது என்று கூறி எச்சரிக்கை செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வினோத், நண்பர் ஒருவருடன் சேர்ந்து விடுதி மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளார்.

கைது செய்யப்பட்ட வினோத் மீது ஏற்கனவே கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள வினோத்தின் கூட்டாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்