திருவண்ணாமலை
பல்பொருள் விற்பனை கடையில் பணம், செல்போன்கள் திருடிய முன்னாள் ஊழியர் கைது
|வந்தவாசியில் உள்ள பல்பொருள் விற்பனை கடையின் ரூ.50 ஆயிரம், செல்போன்களை திருடிய முன்னாள் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
வந்தவாசி
வந்தவாசியில் உள்ள பல்பொருள் விற்பனை கடையின் ரூ.50 ஆயிரம், செல்போன்களை திருடிய முன்னாள் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
பணம், செல்போன் திருட்டு
வந்தவாசியில் அச்சரப்பாக்கம் சாலையில் காவலர் குடியிருப்பு அருகில் பிரபல தனியார் பல்பொருள் விற்பனை கடை உள்ளது. கடந்த 24-ந் தேதி இரவு விற்பனை முடிந்து கடையை வழக்கம்போல் ஊழியர்கள் பூட்டிவிட்டுச் சென்றனர்.
நேற்று முன்தினம் காலை கடை ஊழியர்கள் மீண்டும் கடையை திறந்தனர்.
அப்போது கடையில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம், 3 செல்போன்கள், 3 ஸ்மார்ட் வாட்சுகள் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கடையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஊழியர்கள் ஆய்வு செய்தனர்.
முன்னாள் ஊழியர் கைது
இதில், ஏற்கனவே இந்த கடையில் பணிபுரிந்த வந்தவந்தவாசி பொட்டிநாடு தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரின் மகன் லோகு என்ற லோகநாதன் (வயது 24) என்பவர் பின்பக்கமாக கடையினுள் நுழைந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து கடையின் உரிமையாளர் ஏ.இஷாத் வந்தவாசி தெற்கு போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகநாதனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.