தென்காசி
பேரூராட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர்கள் உருவப்படம் திறப்பு விழா
|சிவகிரி பேரூராட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர்கள் உருவப்படம் திறப்பு விழா நடந்தது.
சிவகிரி:
சிவகிரி பேரூராட்சி அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 100-வது பிறந்தநாளை முன்னிட்டு தந்தை பெரியார், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி மற்றும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் உருவப்படத்திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி உருவப்படங்களை திறந்து வைத்தார். தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சவுக்கை சீனிவாசன், வாசுதேவநல்லூர் யூனியன் தலைவர் பொன்.முத்தையா பாண்டியன், சிவகிரி பேரூராட்சி நிர்வாக அதிகாரி வெங்கடகோபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு வரவேற்றார்.
தென்காசி தொகுதி எம்.பி. தனுஷ் எம்.குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பெரியதுரை, வாசுதேவநல்லூர் யூனியன் துணைத் தலைவர் சந்திரமோகன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சுந்தர வேடிவேலு, நகராட்சி செயலாளர்கள் பிரகாஷ், அந்தோணிச்சாமி, கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் மருதுபாண்டியன், நியமன குழு உறுப்பினர் விக்னேஷ், வரி விதிப்பு மேல்முறையீடு குழு உறுப்பினர்கள் செந்தில்வேல், ராஜலட்சுமி, ரத்தினராஜ், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.