திருப்பூர்
சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
|திருப்பூர் மாநகரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டன.
திருப்பூர் மாநகரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டன.
சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருப்பூர் மாநகரில் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் ஆக்கிரமிப்புகளை திருப்பூர் ஆர்.டி.ஓ. தலைமையிலான குழு சனிக்கிழமைதோறும் அகற்றி வருகிறது. அதன்படி நேற்று காலை அவினாசி ரோடு, பழைய பஸ் நிலையத்தில் இருந்து கோட்டை மாரியம்மன் கோவில் வரை தாராபுரம் ரோடு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.
வருவாய்த்துறை, மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சேர்ந்த குழுவினர் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அகற்றம்
பொக்லைன் எந்திரம் மூலமாக ரோட்டோர கடைகளின் முன் போக்குவரத்துக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பந்தல், பெயர் பலகைகள், சாக்கடை கால்வாயை ஆக்கிரமித்து போட்ட சிமெண்ட் தடுப்புகள் ஆகியவற்றை இடித்து அகற்றினார்கள். இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.