< Back
மாநில செய்திகள்
விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய நிகழ்வை நேரடியாக பார்த்து ரசித்த அரசு பள்ளி மாணவ-மாணவிகள்
விருதுநகர்
மாநில செய்திகள்

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய நிகழ்வை நேரடியாக பார்த்து ரசித்த அரசு பள்ளி மாணவ-மாணவிகள்

தினத்தந்தி
|
24 Aug 2023 12:45 AM IST

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய நிகழ்வை அரசு பள்ளி மாணவ-மாணவிகள் நேரடியாக பார்த்து ரசித்தனர்

சிவகாசி

இஸ்ரோவில் இருந்து கடந்த மாதம் சந்திரயான்-3 நிலவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் இருந்த விக்ரம் லேண்டர் நேற்று மாலை 6 மணியளவில் நிலவில் தரையிறங்கியது. இதை பல்வேறு இணையதளங்களும், தொலைக்காட்சிகளும் நேரடியாக ஒளிபரப்பியது. இந்த ஒளிபரப்பை இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள அறிவியல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர். இந்நிலையில் சிவகாசி அருகே உள்ள ஆனையூர் கிராமத்தில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில் 60 மாணவ, மாணவிகள் விக்ரம் லேண்டர் விண்கலம் நிலவில் தர இறங்கும் நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இதனை கண்டு ரசித்த மாணவ- மாணவிகள் உற்சாகம் அடைந்தனர். மேலும் மகிழ்ச்சியில் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சந்திரயான்- 3 குறித்து அறிவியல் ஆசிரியர் கருணைதாஸ் மாணவர்களுக்கு விளக்கினார் இது குறித்து மாணவி சிவராணி கூறியதாவது:-

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு என்னுடன் படிக்கும் சக மாணவர்களோடு இஸ்ரோ சென்றிருந்தேன். அங்கு ராக்கெட் ஏவுவதை நேரில் கண்டேன். படித்து டாக்டர் ஆக வேண்டும் என நினைத்திருந்த நிலையில் ராக்கெட் ஏவுவதை நேரில் பார்த்த பின்பு நானும் விஞ்ஞானியாக வேண்டும் என்ற முடிவு செய்து அதற்காக படித்து வருகிறேன். விஞ்ஞானி ஆகி நாட்டுக்கு சேவை செய்வேன். இவ்வாறு மாணவி கூறினார்.

மேலும் செய்திகள்