< Back
மாநில செய்திகள்
பாலக்கோட்டில்மாணவர்களுக்கு புகையிலை விழிப்புணர்வு நிகழ்ச்சி
தர்மபுரி
மாநில செய்திகள்

பாலக்கோட்டில்மாணவர்களுக்கு புகையிலை விழிப்புணர்வு நிகழ்ச்சி

தினத்தந்தி
|
12 Sept 2023 1:00 AM IST

பாலக்கோடு:

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை சார்பில் புகையிலை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருட்கள் குறித்து விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்தினார். நிழ்ச்சியின் முடிவில் புகையிலை, குட்கா போன்ற பொருட்களை தவிர்ப்போம், தடுப்போம், மேலும் புகையிலை இல்லாத மாவட்டமாக தர்மபுரியை உருவாக்குவோம் என மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் லட்சுமணன், உதவி தலைமை ஆசிரியர் சுதா ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்