< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
ஜெகதேவியில்முஸ்லிம்கள் கத்திபோடும் நிகழ்ச்சி
|28 July 2023 1:00 AM IST
பர்கூர்:
பர்கூர் அருகே உள்ள ஜெகதேவியில் முகரம் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் கத்திபோடும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதையொட்டி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களது உடல்களில் கத்தி, பிளேடு போன்ற ஆயுதங்களால் கீறிக்கொண்டு ரத்தம் சொட்ட, சொட்ட ஊர்வலமாக சென்றனர். இதில் தமிழகம், கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கருப்பு சட்டை அணிந்து தங்களது துக்கத்தை வெளிப்படுத்தினர்.