< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சாலை விபத்தில் சிக்கிய அமைச்சர் எ.வ.வேலுவின் மகன்
|12 May 2024 6:18 PM IST
அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே. கம்பன் சாலை விபத்தில் சிக்கினார்.
திருவண்ணாமலை,
தமிழக அரசின் பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவர் எ.வ.வேலு. இவர் தி.மு.க. தலைமையின் முக்கிய நிர்வாகியாகவும் உள்ளார். இவரது மகன் எ.வ.வே. கம்பன்.
இந்நிலையில், எ.வ.வே. கம்பன் இன்று திருவண்ணாமலையின் ஏந்தல் பைபாஸ் சாலையில் காரில் சென்றுகொண்டிருந்தார். திருவண்ணாமலை - வேட்டவலம் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது கம்பன் பயணித்த கார் மற்றொரு கார் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் கம்பன், கார் டிரைவர், உதவியாளர், மற்றொரு காரில் பயணித்த இருவர் என மொத்தம் 5 பேர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.