< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
மின்சாரம் தாக்கி ெதாழிலாளி பலி
|25 Oct 2023 1:53 AM IST
கும்பகோணம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.
திருவிடைமருதூர்:
கும்பகோணம் அருகே உள்ள கரிக்குளம் எம்.ஆர். எம் காலனி பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது55). தொழிலாளி. இவர் தனது வீட்டில் உள்ள மின்விசிறியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது செல்வத்தை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருவிடைமருதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து செல்வத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.