< Back
மாநில செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, ஓவியப்போட்டி
தூத்துக்குடி
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, ஓவியப்போட்டி

தினத்தந்தி
|
9 July 2022 10:00 PM IST

உடன்குடி அரசு பள்ளியில் மாணவர்களுக்கு கட்டுரை, ஓவியப்போட்டிகள் நடந்தன.

உடன்குடி:

தூய்மை இந்தியா திடக்கழிவு மேலாண்மை செயலாக்க திட்டத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பை குறித்து உடன்குடி கீழபஜாரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கட்டுரை, ஓவியம், பேச்சு போட்டி நடந்தது. மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை எப்படி கண்டறிவது, அதை எப்படி பிரிப்பது என்பது பற்றி விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு உடன்குடி பேரூராட்சி தலைவர் ஹீமைரா அஸ்ஸாப் கல்லாசி தலைமை தாங்கி பேசினார். செயல் அலுவலர் பாபு முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் பிரின்ஸ் அனைவரையும் வரவேற்றார். பள்ளி கல்விக்குழு துணைத்தலைவர் வேலம்மாள் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்