< Back
மாநில செய்திகள்
மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை போட்டி
சிவகங்கை
மாநில செய்திகள்

மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை போட்டி

தினத்தந்தி
|
24 Jun 2023 12:15 AM IST

மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை போட்டி நடைபெற்றது.

காரைக்குடி,

பிரதமர் நரேந்திரமோடியின் 9 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை கொண்டாடும் வகையில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் தேசம், மாநிலம், மாவட்டம் வாரியாக கலை நிகழ்ச்சிகள், போட்டிகள், கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் கல்வியாளர் பிரிவு சார்பில் இன்று (சனிக்கிழமை) மதியம் 2.30 மணிக்கு காரைக்குடி முத்துப்பட்டினத்தில் உள்ள ஸ்ரீவித்யாகிரி மேல்நிலைப்பள்ளியில் பிரதமர் நரேந்திர மோடியும் தமிழ் வளர்ச்சியும் என்கிற தலைப்பில் கட்டுரை போட்டி நடைபெற உள்ளது. இதில் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொள்ளலாம். சிறந்த கட்டுரைகளுக்கு தக்க சன்மானம், சான்றிதழ்கள் வழங்கப்படும். இத்தகவலை கல்வியாளர் பிரிவின் மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் எஸ்.பாண்டிய நாராயணன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்