திண்டுக்கல்
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை போட்டி
|பழனி அரசு அருங்காட்சியகம் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை போட்டி வருகிற 27-ந்தேதி நடக்கிறது.
பழனி அரசு அருங்காட்சியகம் சார்பில், அறிவியல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை போட்டி நடத்தப்படுகிறது. இது தொடர்பாக அருங்காட்சியக காப்பாட்சியர் குணசேகரன் கூறுகையில், அறிவியல் தினத்தை முன்னிட்டு வருகிற 27-ந்தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை பழனி அரசு அருங்காட்சியக வளாகத்தில் கட்டுரை போட்டி நடைபெறுகிறது. இதில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கிற மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளலாம்.
6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு 'அறிவியலின் வளர்ச்சியால் நம் உலகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்' என்ற தலைப்பிலும், 9-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கிற மாணவ-மாணவிகளுக்கு 'காற்று மாசு ஏற்படுவதால் ஏற்படும் மாற்றங்கள்' என்ற தலைப்பிலும், பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு 'இந்தியாவின் அணுசக்தி திட்டம்' என்ற தலைப்பிலும் கட்டுரை போட்டி நடைபெறுகிறது. போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ-மாணவிகள் வருகிற 25-ந்தேதிக்குள் அருங்காட்சியக அலுவலகத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். கட்டுரை போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் என்றார்.