< Back
மாநில செய்திகள்
வேலூர்
மாநில செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, ஓவியப்போட்டி
|13 Oct 2022 11:04 PM IST
பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, ஓவியப்போட்டி நடைபெற்றது.
காவல்துறை நினைவேந்தல் தினத்தையொட்டி வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கட்டுரை, ஓவியப்போட்டி வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடந்தது.
மாநில வளர்ச்சியில் காவல்துறையின் பங்கு என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலத்தில் கட்டுரை போட்டியும், காவல்துறையின் பணிகள் குறித்து ஓவியப்போட்டியும் நடந்து. இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் அபர்ணா செய்திருந்தார். இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.