< Back
மாநில செய்திகள்
கல்லூரிக்கு சென்ற 2 மாணவிகள் மாயம்
மதுரை
மாநில செய்திகள்

கல்லூரிக்கு சென்ற 2 மாணவிகள் மாயம்

தினத்தந்தி
|
21 Aug 2022 10:13 PM IST

கொட்டாம்பட்டி அருகே கல்லூரிக்கு சென்ற 2 மாணவிகள் மாயமாகி விட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொட்டாம்பட்டி,

கொட்டாம்பட்டி அருகே கல்லூரிக்கு சென்ற 2 மாணவிகள் மாயமாகி விட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெருங்கிய தோழிகள்

கொட்டாம்பட்டி அருகே உள்ள கச்சிராயன்பட்டியை சேர்ந்த மாணவி அரசு கல்லூரில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். அதே ஊரை 18 வயது மாணவி கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். மாணவிகள் கல்லூரிக்கு ஒன்றாக செல்வதால் நெருங்கிய தோழிகளாக இருந்து வந்துள்ளனர்.

இந்தநிலையில் 18 வயது மாணவிக்கு அவரது பெற்றோர் திருமண ஏற்பாடு செய்து வருகின்றனர். கடந்த 18-ந்தேதி 2 மாணவிகளும் காலையில் ஒன்றாக கல்லூரிக்கு சென்று உள்ளனர். மாலையில் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் விசாரித்ததில் மாணவிகள் 2 பேரும் கல்லூரிக்கு வரவில்லை என தெரியவந்தது.

விசாரணை

இதையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்