< Back
மாநில செய்திகள்
பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிலிருந்த ஈரோடு இளைஞர் - விசாரணையில் பல திடுக் தகவல்கள்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிலிருந்த ஈரோடு இளைஞர் - விசாரணையில் பல திடுக் தகவல்கள்

தினத்தந்தி
|
28 July 2022 2:00 PM IST

ஐஎஸ் ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக ஈரோட்டை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு,

ஐஎஸ் ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக ஈரோட்டை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் மாணிக்கம் பாளையம் பகுதியைச் சேர்ந்த யாசிப் முஹசின் என்ற இளைஞரை, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று முன்தினம் மாலை விசாரணைக்காக அழைத்து சென்றனர். யாசிப் முஹசினிடம் இருந்து லேப்டாப், 5க்கும் மேற்பட்ட செல்போன்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரிடம் கடந்த இரண்டு நாட்களாக சுமார் 30 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் இருந்த தொடர்பு குறித்தும், கடந்த சில மாதங்களாக அவர் மேற்கொண்ட வெளி மாநில பயணங்கள் குறித்தும் விசாரணை நடைபெற்றதாக தகவல் வெளியான நிலையில், விசாரணையை தொடர்ந்து ஐஎஸ் ஐஎஸ் அமைப்புடன் தொடர்பிலிருந்ததாக முஹசினை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

யாசிப் முஹசினின் நண்பரான முகமது யாசின் என்பவரிடமும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இதேபோல் விசாரணை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்