கரூர்
கரூரில் வழியாக ஈரோடு-திருச்சி பயணிகள் ரெயில் வருகிற 9-ந்தேதி முதல் தினமும் இயக்கம்
|கரூரில் வழியாக ஈரோடு-திருச்சி பயணிகள் ரெயில் வருகிற 9-ந்தேதி முதல் தினமும் இயக்கப்படுகிறது. இதனை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.
பயணிகள் ரெயில்
கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ஈரோடு-திருச்சி பயணிகள் ரெயில் வருகிற 9-ந் தேதி முதல் ரிசர்வ் இல்லாத எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (தினமும்) என்ற பெயரில் இயங்கும் என்று தென்னக ரெயில்வேயின் சேலம் கோட்டம் அறிவித்துள்ளது.
அதன்படி 06409 என்ற வண்டி திருச்சியில் இருந்து கரூர் வழியாக ஈரோடு வரை செல்லும் ரெயிலும், 06410 என்ற ரெயில் வண்டி ஈரோடு முதல் திருச்சி வரையிலும், 06611 என்ற ரெயில் வண்டி திருச்சியில் இருந்து ஈரோடு வரையிலும், 06612 என்ற ரெயில் வண்டி ஈரோட்டிலிருந்து திருச்சி வரையிலும் தினமும் செல்லும் வகையிலான அறிவிப்பை ெரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
வரவேற்பு
இந்த அறிவிப்பை பொதுமக்களும், ரெயில் பயணிகளும், வரவேற்றுள்ளனர். மேலும் பயணிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று ரெயிலை இயக்க உத்தரவிட்ட தெற்கு ரெயில்வேக்கும், ரெயில்வே சேலம் கோட்டத்திற்கும், ரெயில்வே அதிகாரிகளுக்கும் பொதுமக்கள், ரெயில் பயணிகள் நன்றி தெரிவித்துள்ளார். இதுபோல் நீண்ட காலமாக நிறுத்தப்பட்டுள்ள ரெயில்களையும் இயக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.