< Back
மாநில செய்திகள்
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் நலமுடன் உள்ளார் - தமிழக சுகாதாரத்துறை
மாநில செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் நலமுடன் உள்ளார் - தமிழக சுகாதாரத்துறை

தினத்தந்தி
|
16 March 2023 10:19 AM IST

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை சீராக உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், உடல்நலக்குறைவு காரணமாக நேற்று சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நெஞ்சு வலி காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. இதயவியல் நிபுணர்கள் அவருக்கு சிகிச்சையளித்து வந்தனர்.

இந்த நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவர் தற்போது நலமுடன் உள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், ஓரிரு நாட்களில் மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்