< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் "நான் வெற்றி பெறுவேன்.." நம்பிக்கை தெரிவித்த சுயேட்சை வேட்பாளர்
|17 Feb 2023 8:21 AM IST
நம்பிக்கையோடு ஒற்றை ஆளாக ஓட்டு கேட்கும் மாற்று திறனாளி வேட்பாளர், நிச்சயம் நான் வெற்றிபெறுவேன் என தெரிவித்துள்ளார்.
ஈரோடு,
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும், மாற்றுத்திறனாளி ஒருவர் பை சின்னத்தில் போட்டியிட்டு நாள் தோறும் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் வருகிற 27ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில், எம்.ஏ. ஆங்கில பட்டதாரியான கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் கை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இதற்காக, அவர் ஒற்றை மனிதராக வீடு வீடாக சென்று பெண்கள் இளைஞர்கள் முதியவர்கள் என அனைவரிடத்திலும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த தேர்தலில், ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என, வேட்பாளர் மணிகண்டன் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.