< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 23-ம் தேதி ஓ.பி.எஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்...!
|18 Jan 2023 6:04 PM IST
ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் 2-வது முறையாக ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் பிப். 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடக்கம் ஜன.31, வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் பிப். 7, வேட்புமனு பரிசீலனை பிப். 8, வேட்புமனுவை திரும்பபெற கடைசி நாள் பிப். 10, வாக்கு எண்ணிக்கை மார்ச் 2-ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் ஓ.பி.எஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையில் நடக்கும இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.